Thursday, June 4, 2009



கவிதை கேட்கிறார்கள்


எழுத மனம் இல்லை


உன்னை பார்த்தபிறகு .......................

Wednesday, May 27, 2009

ஆசை


இருவரி கவிதை படிக்க ஆசை

எப்பொது தருவாயடி? உன் ..............

Monday, May 25, 2009

வரலாறு


நாத்திக வாதிகள் நக்கலாக கேட்கிறார்கள்

" தெய்வத்தை நேரில் பார்த்து இருக்கிறாயா ? "

மன்னித்து விடு அம்மா அவர்களுக்கு தெரியாது

நான் " தெய்வத்தோடு வாழ்ந்த வரலாறு "

மாறுகிறது மானம்




வஞ்சியின் உடை பார்த்து


வானம் உடை மாத்துகிறது ...........


அருவியில் தனணீர் வரவில்லை


அவளுக்கு ஜலதோஷம் என்பதால் .........


காதலிக்க ஆரம்பித்த பின்பு என்


காலடியில் பூக்கள் கூட முட்களாய்.............

Wednesday, May 20, 2009

அநாதை

கற்பில் சுமந்த அவள்

கரங்களில் சுமக்க மறந்து விட்டால் .......

கட்டி தழுவ வேண்டிய தகப்பன்

தட்டி கழித்து போனதென்ன ?.............

தொபபுள் கொடி அருந்த நிலையில்

குப்பை தொட்டியில் ஒரு ரோஜாவாய் .........

கதறி அழுகிறேன் பலர் தாய் பாலுக்காக

இல்லை இதயகளே

" கள்ளி பாலுக்காக " தான் ................







வேகம்


அருவிகளில் தண்ணீர் வேகமாக விழுகிறது

கடற்கரைகள் நீ காத்து இருப்பதால் .......

Tuesday, May 19, 2009

முன்னால் காதலன்


மாலை நேரம் , சாலை ஓரம்

உன் நினைவுகளோடு நான்

தலைவனே " என்ன காதல மயக்கமா ? "

தலையாட்டி பேசியது ஒரு மரம்

திகைப்பு உணர்வுகளோடு திரும்பி பாத்தேன்

அது சொன்னது " நானும் அவளுடைய " முன்னால் காதலன் " என்று

முத்தம்


எத்தனனை முறை நீ முத்தம் இட்டாலும் ......

ஏங்கி ! கொண்டுதான் இருக்கிறது பூமி .......

உன் பாத சுவடுகள் பதிவதற்காக...............

தாஜ்மகால்


காலங்கள் கடந்து விட்டன ..........

கல்யாணம் முடிந்துவிட்டது ............

மனைவி வந்து விட்டாள்.....

மறுவருடம் கொலுவைக்க .......

எத்தனையோ பொம்மைகள் அங்கே.....

" என்னை தெரிகிறதா " என்று ? என்னிடம் ஒரு பொம்மை

காதல பரிசாய் நீ கொடுத்த " தாஜ்மகால் "

பொறுக்கி



கண்ணே ! மணியே ! என் கவிதையேய்


பொன்ணே ! பொருளே ! என் பூமியே


அழைத்தேன் அவளை " ஆயிரம் அடை மொழிவைத்து "


அவளும் அழைத்தாள் என்னை " பொறுக்கி " என்று


ஆம் ! நான் பொறுக்கி தாணே


அவளுக்காக இத்தனை வார்தைகளை " பொறுக்கியவன் " அல்லவா ? !

சங்கதமிழ்


* கவிதையில் கற்பனை

அதுமட்டும் இங்கு விற்பனை

உன்னமையே நிற்பதால்

உள்யில்லை போலி ஒப்பனை

* ஒலி இல்லாவிட்டால் ஏது மொழி ?

தமிழ் மொழியில் உமது ஒலி........

விழித்து நிற்கிறது ஆன்மிக விழி............

* சைவத்தின் அடையாளமே

நடமாடும் நூலகமே

குறுந்தகடுக்குள் உமது ஞாணத்தை

குடியமர்த்த இயலுமோ ? ..........

* வில் எடுத்து மீன் பிடிக்கும்

இந்திய இளைய சமுதாயத்தை

சொல் எடுத்து பிடித்தவர்

நீவிர் அல்லவோ...............

* ஆங்கிலம் அரசாள நினைகிறதோ ?

மதமாற்றம் மகுடம் கேட்கிறதோ ?

சங்க தமிழே ! சமய தமிழை
காப்பது உமது பொறுப்பு .........


ரா .ஆவுடைநாயகம்